பொலன்னறுவை மணம்பிட்டிய பாலத்தில் சிக்கியிருந்த 13 பேர் பெல்-212 ரக ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையானது, விமானப்படையின் ஹிகுரக்கொட முகாமில் உள்ள இல. 7 ஹெலிகொப்டர் படைப்பிரிவுக்குச் சொந்தமான விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
