Our Feeds


Friday, November 28, 2025

SHAHNI RAMEES

மீட்பு பணிகளுக்கு ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா இணக்கம்!

 

தற்போது நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. 

விமானங்களை ஏற்றிச் செல்லும் இந்தியக் கப்பல் ஒன்று தற்போது கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும், அந்தக் கப்பலில் உள்ள ஹெலிகொப்டர்கள் இதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை அரசாங்கம் விடுத்த முறையான கோரிக்கைக்கு அமையவே இந்தியா இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »