தொல்லியல் பதாகைகள் அகற்றிய விவகாரம்:
தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை!தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இன்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் சரணடைந்த பிரதேச சபைத் தவிசாளர் உட்பட அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் முக்கிய கட்டளை:
நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்தவொரு தொல்லியல் இடங்களையும் அடையாளப்படுத்தவோ அல்லது அங்கு பதாகைகளை வைக்கவோ முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.
