Our Feeds


Saturday, November 22, 2025

Zameera

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் - மைத்திரிபால சிறிசேன


 முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில், 

இந்த அரசாங்கத்தில் நல்ல மற்றும் தீய விடயங்கள் ஆகிய இரண்டும் உள்ளன.

உதாரணமாக போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையை எடுத்துக்கொண்டால், முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான்.

வேறு எந்த ஜனாதிபதியும் போதைப்பொருளை எரிக்கவில்லை.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன்

எனவே, போதைப்பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் நல்லது என தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »