பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, திம்புலாகல, தமன்கடுவ, வெலிக்கந்த, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களை அந்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
