Our Feeds


Saturday, November 29, 2025

Zameera

கலா ஓயாவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது


 அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 


அந்த பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாகக் கண்காணித்து வருகிறார். 

பேருந்தில் இருந்தவர்கள் அங்குள்ள வீடொன்றின் கூரையின் மீது தங்கியுள்ளனர். 

இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை கடற்படை முன்னெடுத்திருந்தது. 

நேற்று (28) இரவு நீரின் வேகம் காரணமாக அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. 

கடற்படையின் செயற்பாட்டுக் கப்பல் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலதிகப் படையினரும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்தனர். 

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடிக் காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணிக்கும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »