Our Feeds


Tuesday, November 11, 2025

Zameera

பாகிஸ்தான் வீரர் நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு


 பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின் வீட்டின் வாயில் கதவை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார். 

எவ்வாறாயினும் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நஷீம் ஷா ராவல்பிண்டியில் தங்கியுள்ளார். 

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நஷீம் ஷாவின் கிரிக்கெட் தொடருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »