Our Feeds


Wednesday, November 26, 2025

Sri Lanka

கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள்!



கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பில் பிரதமர் அவர்கள் வழங்கிய தெளிவுபடுத்தலில், கல்வி அமைச்சர் என்ற முறையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% சதவீதமாக ஒதுக்கும் நிலைப்பாட்டில்  தான் இருக்கவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.



ஆனால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சமயம் பிரதமர், கல்விக்கு 6% ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். இதன் நிமித்தம், இதற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கூட பிரதமர் பங்கேற்றிருந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


கல்விக்காக ஒரே நேரத்தில் பெரும் தொகையை ஒதுக்குவது கடினமான விடயமாக அமைந்து காணப்பட்டாலும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட கூடிய தொகையை ஒதுக்குவது முக்கியமாகும்.



கல்விக்காக 6% ஒதுக்கு என்ற கோஷத்துடன் கூடிய ஆடைகளை அணிந்துகொண்டும் பிரதமர் இதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். 2026 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த ஆண்டை விட செற்பமே அதிகமாக காணப்படுவதால், சாதகமான அதிகரிப்பை இதற்கு மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »