நியூயோர்க்கின் புதிய மேயராக தெரிவாகியுள்ள 35 வயதுடைய முஸ்லிம் இளைஞன் ஸஹ்ரான் மம்தானிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.
கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் ஒரு ஜிஹாதிஸ்ட், இவர் மேயராக தேர்வானால் அமெரிக்காவில் மீண்டும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்றெல்லாம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மம்தானியை நேரில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஸஹ்ரான் மம்தானி ஒரு பகுத்தறிவுள்ள சிறந்த மனிதர். நியுயோர்க் நகரம் அவரால் நன்மை பெறும் என்றெல்லாம் வாழ்த்தியுள்ளார் ட்ரம்ப்.
