Our Feeds


Saturday, November 15, 2025

Zameera

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது


 அருக்கொட, ருக்கஹ வீதியிலுள்ள வீடொன்றில் ரூபாய் 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் பாணந்துறையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணந்துறை குடு சலிந்து என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்தவர் ஆவார்.


குறித்த பெண்ணிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், சிறிய ப்ளாஸ்டிக் பைகள், இலத்திரனியல் தராசு, கையடக்கத் தொலைபேசி மற்றும் 36,500 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 


முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய நடவடிக்கைக்கு இணங்க ஹிரண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சந்தேக நபரான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய சீடரான, துபாயில் இருக்கும் ரணயா என்பவரால் பல்வேறு நபர்கள் மூலம் வழங்கப்படும் இந்த போதைப்பொருளை இவர் பொதி செய்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »