Our Feeds


Saturday, November 15, 2025

Zameera

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தலாம்

வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எமது நாடு 25 வருடங்களுக்கு பின்னிலையில் உள்ளது.

எம்முடன் இருந்த நாடுகளும் கூட எங்களை முந்திச் சென்றுள்ளன.

அதற்கு மலேசியாவும் ஒரு உதாரணமாகும்.

பேருந்தில் பயணிக்கும் போது பயண தூரத்திற்கான கட்டணங்களை வழங்கிய பின்னர் மிகுதி பணத்தை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

அவற்றை தவிர்க்கும் வகையில் சிறிய முன்னேற்றத்துடன் டிஜிட்டலில் முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி காலையில் இருந்து எந்தவொரு வங்கியினதும் கடன் அட்டை, வரவு அட்டையினையும் பயன்படுத்தி பேருந்து கட்டணத்தையும் செலுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »