Our Feeds


Thursday, November 6, 2025

Admin

பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் Dr ஸாகிர் நாயக் பங்களாதேஷ் நுழையத் தடை



பிரபல இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் டாக்டர் ஸாகிர் நாயக் அவர்கள் பங்களாதேசத்துக்குள் நுழையத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தற்போது மலேசியாவில் வசித்து வரும் டாக்டர் ஸாகிர் நாயக் அவர்கள் எதிர்வரும் 28, 29ம் திகதிகளில் பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் மாபெரும் இஸ்லாமிய விளக்க மாநாடு ஒன்றில் பங்கேற்க்க இருந்த நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், டாக்டர் ஸாகிர் நாயக் அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கான வீஸா அனுமதி கொடுத்திருந்த நிலையிலேயே தற்போது இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »