Our Feeds


Friday, December 12, 2025

Zameera

04 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்கிறது..


 4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால் இந்த சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். 

நேற்று (11) மீகஹகிவுல மற்றும் தெமோதர ஆகிய பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இது குறித்து மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார். 

குறித்த பகுதிகளில் நிலவும் ஆபத்து நிலையைக் கருத்திற்கொண்டு, வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய, 5 மாவட்டங்களின் 38 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட (Level 2) 'அவதானம்' எச்சரிக்கையும் அவ்வாறே செயற்படுத்தப்படும். 

இதற்கு மேலதிகமாக, 3 மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) 'விழிப்புடன் இருங்கள்' என விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். 

கிடைக்கும் மழைவீழ்ச்சியுடன் இந்த அறிவிப்புகள் மாறக்கூடும் என்பதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இது குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருக்க வேண்டும். 

பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ள பின்னணியில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நீர்ப்பாசனத் திணைக்களம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அல்லது வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் குறித்து மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், மீண்டும் இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படாதிருக்க வழங்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். 

கடந்த நவம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று (12) வரையிலான காலப்பகுதியில் ஆபத்து மதிப்பீடுகளைக் கோரி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2,716 கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் 589 கோரிக்கைகள் மீதான ஆய்வுகள் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வசந்த சேனாதீர தெரிவித்தார். 

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையில் இந்நாட்களில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விடயம், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருப்பதே என வலியுறுத்திய அவர், வார இறுதியில் உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். 

"நாட்டில் இன்னும் ஆபத்தான நிலைமையே காணப்படுகின்றது. இது உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதற்கான நேரமல்ல... நாம் ஆபத்தான நிலையில் உள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார். 

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்: 

எச்சரிக்கை மட்டம் 3 - வெளியேறுங்கள் (சிவப்பு அறிவிப்பு) 

கண்டி மாவட்டம்: 

உடுநுவர 

கங்கவட்ட கோரள 

உடுதும்பர 

தோலுவ 

மினிபே 

பாதஹேவாஹெட்ட 

மெததும்பர 

தெல்தொட்ட 

அக்குரணை 

கங்கஇஹல கோரல 

பாததும்பர 

யட்டிநுவர 

தும்ப்பனே 

உடுநுவர 

ஹாரிஸ்பத்துவ 

பூஜாப்பிட்டிய 

பஸ்பாகே கோரல

 பன்வில 

ஹதரலியத்த 

குண்டசாலை 

கேகாலை மாவட்டம்: 

யட்டியாந்தோட்டை 

குருநாகல் மாவட்டம்: 

ரிதிகம 

மல்லவப்பிட்டி 

மாவத்தகம 

மாத்தளை மாவட்டம்: 

நாவுல 

ரத்தோட்டை 

அம்பகங்க 

கோரல 

உக்குவளை 

வில்கமுவ 

யட்டவத்தை 

மாத்தளை 

பல்லேபொல 

லக்கல பல்லேகம 

எச்சரிக்கை மட்டம் 2 - அவதானமாக இருங்கள் (Amber) 

பதுளை மாவட்டம்: 

பதுளை 

ஹப்புத்தளை 

ஹாலிஎல 

கந்தகெட்டிய 

பசறை 

மீகஹகிவுல 

ஊவ பரணகம 

வெலிமடை

லுணுகலை 

எல்ல 

பண்டாரவளை 

சொரணாதொட்ட 

ஹல்துமுல்ல 

கேகாலை மாவட்டம்: 

தெஹியோவிட்ட 

தெரணியகலை 

ருவன்வெல்ல 

கேகாலை 

கலிகமுவ 

வரக்காபொல 

மாவனெல்லை 

ரம்புக்கனை 

அரநாயக்க 

புளத்கொஹுபிட்டி 

குருநாகல் மாவட்டம்: 

பொல்கஹவெல அலவ்வ 

நுவரெலியா மாவட்டம்: 

நுவரெலியா 

அம்பகமுவ 

கோரல 

தலவாக்கலை 

நோர்வுட் 

கொத்மலை மேற்கு 

கொத்மலை கிழக்கு 

வலப்பனை 

ஹங்குரான்கெத்த 

நீலதண்டாஹின்ன 

மதுரட்ட 

இரத்தினபுரி மாவட்டம்: 

கஹவத்தை 

கொடக்கவெல 

கொலன்ன 

எச்சரிக்கை மட்டம் 1 - விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்) 

கம்பஹா மாவட்டம்: 

 

அத்தனகல்ல 

திவுலப்பிட்டிய 

மீரிகம 

குருநாகல் மாவட்டம்: 

நாரம்மல 

இரத்தினபுரி மாவட்டம்: 

கிரியெல்ல 

இரத்தினபுரி 

எஹெலியகொட 

குறுவிட்டை 

எலபாத்த 

அயகம 

பலாங்கொடை 

கலவானை 

ம்புல்பே 

நிவித்திகலை 

ஓப்பநாயக்க 

பெல்மதுளை 

கல்தோட்டை


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »