நுவரெலியா பொருளாதார வர்த்தக மையத்தின் ஊடாக 88000 கிலோ மரக்கறி நாடு முழுவதும் விநியோகம்.
நுவரெலியா பொருளாதார வர்த்தக மையத்தின் ஊடாக நாட்டின் பல மாகாணங்களுக்கு 88000 கிலோ மரக்கறி கேள்வி இருந்ததைக் தொடர்ந்து நேற்று முன்தினம் 13 ம் திகதி நாட்டின் பல மாகாணங்களுக்கு எடுத்து சென்றதாக நுவரெலியா பொருளாதார வர்த்தக மையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
அதன் படி கோவா 210/=கெரட் 230/=லீக்ஸ் 230/=ராபு 160/=பீட்ருட் 260/= பீட்ரூட் கட் 310/=கிலங்கு 290/=நோக்கொல் 230/=சலாது 550/=இவ்வாறான மரக்கறி வகைகள் 88000 கிலோ மேற் குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்ய பட்டது.
மேற் குறிப்பிட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் காலி, மாத்தறை,பிட்டிகல, களுத்துறை, அம்பாறை, காத்தான்குடி, ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்ல பட்டது என நுவரெலியா மாவட்ட பொருளாதார வர்த்தக மையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பொருளாதார வர்த்தக மையத்தில் மரக்கறி வகைகள் கேள்விகளுக்கு ஏற்ப விவசாயிகள் இருந்து நியாயமான விலையில் பெற்று கொள்ள படும் என நுவரெலியா மாவட்ட பொருளாதார மையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்
