கேகாலை மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரில், நேற்றைய தினம் (12) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மாவனல்லை கொட்டியா கும்பற ஜும்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள், கேகாலை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கிளை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்தச் சந்திப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.
கேகாலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 15 கிராமங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறன. நான்கு கிராமங்கள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறன. குறித்த பிரதேச மக்களுடைய நிவாரண உதவிகள், அவர்களுடைய மீள் கட்டுமான விடயங்கள் தொடர்பாகக் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அப்துல் ரஹ்மான் பஹ்ஜி, மௌலவி தாஸிம், ஹிரா பௌண்டேஷன் செயலாளர் அஷ்ஷைக் மும்தாஸ் மதனி மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பின் போது, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புகள், இழப்புகள், பாதிக்கப்பட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காகச் செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். அரசிடம் இருந்து எவ்வாறு மக்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.
அதே போல, கேகாலை மாவட்டத்தைக் கட்டியெழுப்ப தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், கேககாலை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர், உறுப்பினர்கள், கேகாலை மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
-- ஊடகப்பிரிவு
