Our Feeds


Wednesday, December 31, 2025

SHAHNI RAMEES

காவல்துறைக் காவலில் இருந்தபோதே மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!

 


களுத்துறையில் உள்ள நாகொட பொது மருத்துவமனைக்குள்

நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி, சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 

14ஆம் இலக்க நோயாளர் விடுதியில் காவலில் இருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 


 

ரிவால்வர் வகை துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

 

சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »