Our Feeds


Saturday, December 20, 2025

Zameera

அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை


 அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்படி, முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவிடமிருந்து பெறப்பட்ட இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் மதுபானம் அருந்தியதற்கான எந்தவொரு தடயங்களும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சமீபத்தில் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வீதி விபத்தைத் தொடர்ந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தாரா என்பதைத் தீர்மானிக்க இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »