மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவு இலக்கம் 3 இன்று இரவு 9.45 மணிக்கு 0.5 மீட்டர் அளவில் திறக்கப்பட்டுள்ளது, விநாடிக்கு 1500 கனஅடி வீதத்தில் நீரை முறையாக அம்பன் ஆற்றில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக (மொரகஹகந்தை - கலுகங்கை) பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார்.