இன்று (11), கம்பளை போதலபிடிய பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், போதலபிடிய மற்றும் அதன் அருகாமையில் இருக்கின்ற கிராமங்களுக்கான கிராம சேவை அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த பிரதேச உறுப்பினர்களைச் சந்தித்துக் குறித்த பிரதேசத்திற்கு அவசரமாகவும், அவசியமாகவும் செய்யப்பட வேண்டிய விடயங்கள், அரச நிவாரண உதவிகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
அதனடிப்படையில் உடனடியாக போதலபிடிய பிரதேசத்தின் வீதிகளைத் துப்பரவு செய்வதற்கான பணிகளையும் மேற்கொண்டு, மேலதிகமான இயந்திர உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு கம்பளை போதலபிடிய பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டுவருகிறது.
இக்கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ், உட்பட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
-- ஊடகப்பிரிவு
