Our Feeds


Sunday, December 7, 2025

Zameera

நிவாரணப்பொருட்களுடன் மியன்மார் விமானம் இலங்கைக்கு


 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது.


 நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.


 இவற்றில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்கும் இதனை மியான்மருக்கான இலங்கைத் தூதர் திருமதி மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் திரு. சாவ் பியோ வின் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா மற்றும் விமானப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »