இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் முன்னாள் உதவி பகுப்பாய்வாளரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து 6,415,050 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் முன்னாள் உதவி பகுப்பாய்வாளர் கடந்த 05 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் உதவி பகுப்பாய்வாளர் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னாள் உதவி பகுப்பாய்வாளர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
