அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்கு கண்டி, மஹகந்த பிரதேசத்தில் மாடி வீட்டுத்திட்டம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கங்கவட்ட கோரளை பிரதேச சபைத் தலைவர் சேனாதீர தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கா தலைமையில் நடைபெற்ற கங்கவட்ட கோரளை பிரதேச அபிவிருத்தி சபைக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அனர்த்தத்தின்போது கண்டி கங்கவட்ட கோரளைப் பிரதேசத்தில் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்காக இந்த மாடிவீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.
