பணச்சலவைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் ஐந்து அதிகாரிகள் நீதிமன்றில் வருகை தந்திருந்தனர். எனினும், முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவா வருகை தராததால், அவர்கள் மீது மீண்டும் திறந்த பிடியாணை வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட விசாரணைகளை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் மே 21ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
