சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாலைதீவு அரசாங்கம் இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள டின் மீன்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
மேலும், மாலைதீவின் பொது மக்கள் சேவை ஊடகம் (PSM) அந்த நாட்டில் உள்ள தனியார் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பித்த "இலங்கையர்களுடன் மாலைதீவினர்" (CeylonaaEkuDiveheen) பிரச்சாரத்தின் கீழ், (12/03 வரை) சேகரிக்கப்பட்ட 2,447,011 அமெரிக்க டொலர்களை உயர்ஸ்தானிகர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
