ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் முன்னெடுக்கப்படும் “மூச்சு” வேலைத்திட்டத்தின் கீழ் சிலாபம் வைத்தியசாலைக்கு ரூ.46 இலட்சம் மதிப்புள்ள குருதி சுத்திகரிப்பு இயந்திரமொன்றையும், நடமாடும் RO ப்லான்ட் ஒன்றையும் நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக “மூச்சு” வேலைத்திட்டத்தின் மூலம் இன்று மாரவில மருத்துவமனைக்கும் ரூ. 46 இலட்சம் மதிப்புள்ள Introduction Dialysis இயந்திரமொன்றும் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரணங்களை பெறுவதற்கு அரச அதிகாரிகள் மாத்திரமன்றி, “பிரஜா சக்தி” போன்ற சமூகக் குழுக்களின் அலுவலர்களது சான்றுபடுத்தலையும் கோருவது இந்நிவாரண பணிகளை வேறொரு திசையை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையாகும். மேற்படி நிவாரண செயல்முறை அரசியல் மயமாக்கப்படாதிருக்க வேண்டும். தூய்மையான பொறுப்புணர்வுள்ள பொறிமுறையொன்றை செயல்படுத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
