Our Feeds


Saturday, December 13, 2025

Zameera

ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க தீர்மானம்


 நாட்டில் வீசிய 'டித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி அங்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். 


நிலவும் மண்சரிவு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிலத்தை உறுதிப்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான அவசியமான அறிவுறுத்தல்களையும் திட்டங்களையும் இதன்போது அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார். 


அதற்கமைய, ஹக்கல தாவரவியல் பூங்கா இன்னும் சில நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளது. 


இதன்போது தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் கே. பண்டார, நுவரெலியா மாவட்டத்திற்கான புவிச்சரிதவியலாளர் புத்திக மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »