Our Feeds


Monday, December 8, 2025

Zameera

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்



சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.400 மில்லியன் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த போயிங் 747-400 ரக பெரிய சரக்கு விமானம் இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

 

குறித்த நிவாரணப் பொருட்களில் உயிர்காப்பு அங்கிகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகின்றது. 

 

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் ஜி சாங்ஹோங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »