Our Feeds


Saturday, December 6, 2025

Zameera

தொலைத்தொடர்பு வசதிகளை (கவரேஜ்) வழங்காத Dialog மற்றும் Airtel நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது


 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக, நானும் நண்பர் U.L. அன்சாரும் இணைந்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளோம்.


தங்கள் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் பொருட்டு முற்பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், கடந்த 27ஆம் திகதியில் இருந்து இன்றுவரை, எந்தவித முன்னறிவித்தலுமின்றி தங்களுடைய தொலைத் தொடர்பு வசதிகளை வழங்காமல் இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

மேலும் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்காத நாட்களுக்கும் சேர்த்து, பணத்தை அறவிட்டு இந்த நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன.

அதேவேளை முன்னறிவித்தலின்றி இவர்கள் தொலைத்தொடர்பு📲 வசதிகளை இடைநிறுத்தியமையினால், எமது தொழில் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

மேலும் நாட்டில் பேரிடர் ஏற்பட்ட காலப்பகுதியில், இவர்கள் இவ்வாறு முன்னறிவித்தலின்றி தொலைத்தொடர்பு வசதிகளை முடக்கியமையினால், எமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களின் நலன்கள் பற்றி அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம்.

எனவே, இந்த இரண்டு நிறுவனங்களின் ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, எங்கள் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இது தனிப்பட்ட முறைப்பாடு அல்ல; பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் சார்பானது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »