டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
குறித்த காசோலையை, அதன் தலைவர் Abdul Razzle Abdul Sattar இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
அந்த சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Mohamed Abdul Hussain, Mohamed Ismail Dawood ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
