யமன் குழுவுக்கு ஆயுதங்களை கொண்டு சென்ற UAE யின்
2 ஆயுதக் கப்பல்களை மொத்தமாக அழித்தது சவுதி அரேபியா - மத்திய கிழக்கில் பதற்றம்.யமனில், ஹூதி படைகளுக்கு எதிராக சவுதியில் ஆதரவு பெற்ற யமன் அரசாங்கம் இயங்கி வரும் நிலையில், ஹூதிகளுக்கு எதிராக ஒரு கூட்டு ராணுவப் படையை சவுதி தலைமையிலான படைகள் வழிநடத்தி வருகின்றன. இந்நிலையில் யமனின் தெற்கில் இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளின் அனுமதியின்றி தெற்கு இடைக்கால கவுன்சில் படைகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - UAE 2 கப்பல்களில் ஆயுதங்களை அனுப்பி நிலையில் இன்று காலை UAE யின் 2 ஆயுதக் கப்பல்கள் மீதும் சவுதி அரேபியா உடனடி தாக்குதல்களை நடத்தியது.
UAE யின் 2 ஆயுத கப்பல்களையும் இலக்கு வைத்து யமனின் முகல்லா துறைமுகத்தில் நடத்தப்பட்ட உடனடி தாக்குதல்களில் 2 கப்பல்களும் மொத்தமாக அழிக்கப்பட்டன.
