கடந்த ஜனவரி 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட
நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 56 பஸ் சாரதிகளில் 10 பேர் போதைப்பொருள் பாவனை செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது பல பஸ் சாரதிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது பஸ் சாரதிகளிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளின் சோதனையில், ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பாவனை செய்யும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனை உறுதி செய்யப்பட்ட பஸ் சாரதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது மிகவும் பாரதூரமான மற்றும் சிக்கலான நிலைமை என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்க பஸ் உரிமையாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
