போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய,
சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட பல பொலிஸ் அதிகாரிகளை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்திலுள்ள இலங்கை பொலிஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொலிஸ் அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாட்டிலிருந்து பாதாள உலக கும்பல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க அரசாங்கம் பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
