இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகள் காரணமாக, கொழும்பு நகரில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒத்திகை நாட்கள் மற்றும் நேரங்கள்:
சுதந்திர தின ஒத்திகைகள் நடைபெறும் கீழ்க்கண்ட நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்
ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 02: காலை 7.45 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.
பெப்ரவரி 01: அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.
சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று:
பெப்ரவரி 4-ம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை சுதந்திர சதுக்கத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பகுதிகள்:
சுதந்திர சதுக்கத்தை (Independence Square) சூழவுள்ள பிரதான வீதிகளில் இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. எனவே, இந்த நேரப்பகுதிகளில் கொழும்பு நகருக்குள் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
