Our Feeds


Tuesday, January 13, 2026

Zameera

இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்


 இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த வருகையில் 17.0 சதவீதமாகும். 

அத்துடன், இந்த ஆண்டின் முதல் சில நாட்களில் ரஷ்யாவிலிருந்து 8,425 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 பேரும், ஜேர்மனியிலிருந்து 5,306 பேரும் மற்றும் 3,285 அவுஸ்திரேலிய பிரஜைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர். 

மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்படி, கடந்த ஆண்டில் சாதனை அளவாக 2,362,521 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »