போதைப்பொருள் பாவனைக்கு
அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாறிசி ஜயசேகர தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.நாட்டில் ஹெரோய்ன் உட்பட நச்சுப் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் குறித்த ஒரு பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடெங்கிலும் பரந்து காணப்படுவதால் இவர்களின் ஊடாக போதைப்பொருள் பாவனை மேலும் தீவிரமடைந்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையங்கள் நாட்டின் ஒருசில பிரதேசங்களில் மாத்திரம் காணப்படுவதானது போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புனர்வாழ்வு நிலையத்தையேனும் அமைக்க வேண்டும்.
