பொகவந்தலாவை டின்சின் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
