மட்டக்களப்பு மாவட்டம், காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக, இன்று (07) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(1)-ன் விசேட அதிகாரத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேள்வியெழுப்பினார்.
இதன்போது, மக்களின் வாழ்வாதாரத்தையும் காணி உரிமையையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
