Our Feeds


Tuesday, January 27, 2026

Zameera

கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் காயம்


 மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் அணிந்திருந்த நபரொருவர் ஆசிரியரை கத்தியால் குத்தும் காட்சிகள் வீதியில் உள்ள சி.சி.ரிவியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »