Our Feeds


Wednesday, January 28, 2026

Zameera

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா


 விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) தலைவராகப் பணியாற்றிய எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2024 அக்டோபர் மாதம் இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். புதிய அரசாங்கத்தினால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ அபேவிக்ரமவின் ராஜினாமாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு,விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பதில் தலைவராகத் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள அவர்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »