மாவனல்ல கொலைகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 02ஆம் திகதி மாவனல்ல தனாகமவத்த பகுதியில், கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கொலை செய்யப்பட்டனர்.
58 மற்றும் 66 வயதுடைய இரண்டு பெண்களும், 51 வயதுடைய ஆண்ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்படிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மாவனல்ல வைத்திய சாலையில் இருந்து கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
