கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் உதவியுடனேயே இந்த ஈ - கேட் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த இலத்திரனியல் நுழைவாயில்களினூடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
