Our Feeds


Saturday, January 10, 2026

Zameera

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

 




யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »