Our Feeds


Thursday, February 19, 2026

SHAHNI RAMEES

இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்!

 



இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள்

பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.


முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.


இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.


அடையாளம் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கவும், அவற்றைச் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உள்ளூர் மட்டத்தில் 'சமூகப் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்படவுள்ளன.


நாட்டின் கலாசார மரபுகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், இனம் காணப்படாத இந்தத் தொல்பொருள் தளங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »