Our Feeds


Thursday, February 19, 2026

SHAHNI RAMEES

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது; போதுமான கையிருப்பு உள்ளது - லிட்ரோ நிறுவனம்!

 

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.


கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் 284,000 வீட்டு பாவணைக்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.


இன்று வியாழக்கிழமை (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 வீட்டு பாவணைக்கான எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேவைக்கேற்ப போதுமான அளவு இருப்புகளை நிறுவனம் ஏற்கனவே ஒழுங்குப்படுத்தியுள்ளதாகவும், விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »