முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை, இந்தச் சதி முயற்சியுடன் தொடர்புடைய அவரது நிர்வாகத்தின் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் இன்று தண்டனைகளை அறிவித்துள்ளது.
கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun): முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரோ சாங்-வோன் (Roh Sang-won): முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தளபதிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சோ ஜி-ஹோ (Cho Ji-ho): முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிம் பொங்-சிக் (Kim Bong-sik): முன்னாள் சியோல் பெருநகர காவல்துறை பிரிவின் தலைவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொக் ஹியூன்-டே (Mok Hyun-tae): தேசிய சபையின் காவல்துறை பாதுகாப்புக் பிரிவின் முன்னாள் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் மேன்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
