Our Feeds


Monday, February 23, 2026

Zameera

நேபாளத்தில் பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 18 பேர் பலி


 நேபாளத்தில், இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மண்டுவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த பஸ்ஸில் 44 பேர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »