2022ம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு தேசிய ரீதியில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களே காரணமென மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் 36வது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
