Our Feeds


Wednesday, February 18, 2026

Zameera

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க


 தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடத்திருக்குமா? என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஒரு சில அசம்பாவிதங்கள் பதிவாகின்றன.

அதற்காக முழு நாட்டிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் பிரச்சினை இருப்பதாக கூற முடியாது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின் இரண்டின் நாட்டின் தேசிய வீரர்கள் எவ்வாறு நாட்டிற்கு வருகை தருவார்கள்.

பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்படுத்திய பின்னரே போட்டியை நடத்துவதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கட் பேரவை வழங்கும்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இடமளிக்க முடியாது.

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »