ரயில் சாரதிகள் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே லோகோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இராணுவ அதிகாரிகளுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்ததால், தொழில்துறை நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக அதன் செயலாளர் திமுத்து எதிரிசிங்க தெரிவித்தார்.
