Our Feeds


Saturday, February 28, 2026

Zameera

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது - சம்பத் அத்துகோரல


 (எம்.ஆர்.எம்.வசீம்)


பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.


சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய காலத்தில் நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அஅரசாங்கத்துக்கு அரசாங்கத்துக்கு 16 மாதங்கள் கடந்தும் அதனை செய்துகொள்ள முடியாமல் போனது. கடந்த ஏப்ரல் மாதம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவே ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை செய்துகொள்ள முடியாமல்  போனதால், தற்போது  இந்த ஏப்ரல் மாதமாகும்போது, இதுதொடர்பில் ஏதனையாவது  மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது  உளவுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை கைது செய்திருக்கிறார்கள்.


சுரேஷ் சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார். பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். யாழ்ப்பாணாத்துக்கு சென்றும் அதனையே மேற்கொண்டிருந்தார்.



அதேபோன்று தற்போது நிலக்கரி மோசடி தொடர்பில் அரசாங்கத்துக்கு  எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறைப்பதற்கும் ராஜபக்ஷ் அரசாங்கத்துக்கு ஆதரவாக மக்கள் தற்போது ஒன்றுசேர்வதை தடுப்பதற்காகவுமே இந்த கைது இடம்பெற்றிருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை  ஜனாதிபதிக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருப்பதால், இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டிய ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை பயன்படுத்தியே சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தொடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் தப்பிச்செல்லும்போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்பாேதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர. அதனால் அருண ஜயசேகர, ஷானி அபேசேகர,ரவி செனவிரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான இப்ராஹிமுடைய மகன்களே  குண்டுதாரிகளாக இருந்தனர். ஆகியோரை வைத்துக்கொண்டே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்தி இருக்கிறது. எந்தவொரு நாட்டினதும் அரச தலைவர் தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்த முயற்சிப்பதில்லை.


ஆனால் இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தனது அரசை, புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தி வருகிறார்கள். இந்த கைதானது யுத்தத்தை வெற்றிகொள்ள உயிர் தியாகம் செய்தவர்களின் தாய் தந்தையர்கள் மற்றும் உறவினர்களின் உள்ளம் புண்படும் செயலாகும். யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை, புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »